செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லைஇது தான் நிதர்சனமான உண்மைஎங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள்.
கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படிசிட்டுக்குருவி வரும்நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்.
அதை சதுரமாக வைத்து கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து எங்கள்தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும்தாழ்வாரத்தில்கட்டி தொங்க விட்டோம்என்ன.
ஆச்சரியம் 20 வீட்டில்18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டதுநீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள். உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவிவரும்உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது நிலை இப்படி போனதற்கு ஓட்டுவீடு இல்லாதது ஒரு காரணம்.
மற்றொன்று சிறுதானிய கம்பு ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை தென்னை கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம்அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள் அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும் அபுதாபியில்ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன.

Comments
Post a Comment