துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் சுமார் 36 கோடி ரூபாயை வென்ற இந்தியர் இந்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர் 42 துபாய் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் அங்கு வசித்து வருகிறார்.
அபுதாபியில் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை இவர் வாங்கி இருந்தார் இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 2 1 கோடி திர்ஹம்கள் இந்திய மதிப்புக்கு 36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய் கிடைத்துள்ளது.
இந்த தொகையை வைத்து உலக சுற்றுலா செல்வேன் மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் கேரளாவில் புதிதாக இன்னொரு வீடு கட்ட ஆசைப்படுகிறேன் அங்கு இருக்கும் எனது தாயார் மற்றும் என் மனைவியின் தாயாரை நல்லபடியாக பராமரிக்க வேண்டும் என்று தனது எதிர்கால.
திட்டத்தை குறிப்பிடும் ஹரிகிருஷ்ணன் தேவைகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு கடவுள் அருளால் அதை இப்போது என்னால் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

Comments
Post a Comment